சரியான மற்றும் நிலையான சிகிச்சை மூலம், காசநோயை முழுமையாகக் குணப்படுத்த முடியும். அறிகுறிகள் மற்றும் தீவிரத்தைப் பொறுத்து, உங்களுக்கு தேவையான மருந்துகள் பரிந்துரைக்கப்படும்.
உங்களால் மற்றவர்களுக்கு தொற்று ஏற்படும் சாத்தியம் இருந்தால், குறைந்தது சில வாரங்களாவது வீட்டிலேயே இருக்குமாறு பரிந்துரைக்கப்படலாம்.
காசநோய் மற்றும் பிசிஜி தடுப்பூசி பற்றிய கூடுதல் தகவலுக்கு உங்கள் மருத்துவரைக் கலந்து ஆலோசிக்கவும்.