You are now leaving GSK’s website and are going to a website that is not operated/controlled by GSK. Though we feel it could be useful to you,we are not responsible for the content/service or availability of linked sites. You are therefore mindful of these risks and have decided to go ahead.

Agree Agree Agree Stay

உங்கள் குழந்தையை ரோட்டாவைரல் வயிற்றுப் போக்கில் இருந்து பாதுகாக்க மிகவும் சிறந்த வழி ரோட்டாவைரஸ் வேக்சினேஷன்தான்.

தடுப்பூசியை தவற விட்டுவிட்டால் நான் என்ன செய்ய வேண்டும்?
கேட்ச்-அப் தடுப்பூசி

உரிய நேரத்தில் இந்தத் தடுப்பூசிகளின் டோஸை நீங்கள் தவற விட்டுவிட்டால், உங்கள் மருத்துவரிடம் கேட்ச்-அப் தடுப்பூசி பற்றி கலந்தாலோசிக்கலாம்.

உங்களுக்குத் தெரியுமா?

  • ரோட்டா வைரஸ் நோயிலிருந்து பாதுகாக்கத் தடுப்பூசி உதவும்.
  • ரோட்டாவைரஸ் ஏறக்குறைய ஒவ்வொரு குழந்தையையும் 3-5 வயதிற்குள் பாதிக்கிறது. உலக அளவில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படும் கடுமையான, நீர்ச்சத்திழப்பு வயிற்றுப்போக்கிற்கு இது முக்கிய காரணமாகும்.

தாமதிக்கவேண்டாம்!

ரோட்டா வைரஸ் வயிற்றுப்போக்கு தடுப்பூசி பற்றி உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள்.

ரோட்டா வைரஸ் என்றால் என்ன?

ரோட்டா வைரஸ் என்பது கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியை ஏற்படுத்தும் ஒரு வைரஸ் ஆகும். இது பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் இளம் குழந்தைகளை மட்டுமே பாதிக்கிறது. வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி தீவிர நீர்ச்சத்திழப்புக்கு (உடல் திரவம் இழப்பு) வழிவகுக்கும். நீர்ச்சத்திழப்புக்குச் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், ஆபத்தாக முடியும். உலகெங்கிலும் உள்ள 5 வயதுக்குட்பட்ட ஒவ்வொரு குழந்தையையும் இது பாதிக்கிறது.

ரோட்டா வைரஸ் எவ்வாறு பரவுகிறது?

வைரஸ் எளிதில் வாய் வழியாகப் பரவும் மற்றும் மலம் மூலம் பரவுகிறது. இது நிகழக் காரணம்:

  • அசுத்தமான கழுவப்படாத கைகளை உங்கள் வாயில் வைப்பதனால்
    அசுத்தமான பொருட்களை அல்லது பரப்புகளைத் தொட்டுவிட்டு விரலை வாயில் வைப்பதனால்
    அல்லது அசுத்த உணவுகளை உண்பதனால்

பாதிக்கப்பட்ட நபர்கள் ரோட்டா வைரஸ்களை மலம் மற்றும் வாந்தி மூலம் மிக அதிக அளவில் பல நாட்களுக்கு வெளியேற்றுகிறார்கள். அறிகுறிகளின் போதும் குணமடைந்த பின் முதல் மூன்று நாட்களுக்கும் ரோட்டா வைரஸை அதிகமாக வெளியேற்றுவதனால் பிறருக்குத் தொற்று ஏற்படும் அபாயம் அதிகம். ரோட்டா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் அறிகுறிகளை காட்டும் முன்னரே மற்றவர்களைப் பாதிக்கலாம்.

ரோட்டா வைரஸின் அறிகுறிகள் என்ன?

ரோட்டா வைரஸ் நோய் பொதுவாக விரைவாக நிகழ்கிறது (சுமார் 2 நாட்களில்). 3 முதல் 8 நாட்களுக்கு வாந்தி மற்றும் நீர்போல வயிற்றுப்போக்கு இருப்பதைக் கொண்டு இது வகைப்படுத்தப்படுகிறது.

ரோட்டா வைரஸ் நோயின் அறிகுறிகள் மாறுபடும், தளர்வான மலம் முதல் கடுமையான வயிற்றுப்போக்கு வரை மற்றும் வாந்தி, நீர்ச்சத்திழப்பு, எலக்ட்ரோலைட் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் அதிர்ச்சி ஏற்பட்டு மரணத்திற்கு வழிவகுக்கும்.

காய்ச்சல், வயிற்று வலி, பசியின்மை போன்றவையும் ஏற்படும்.

ஒரு குழந்தைக்கு எப்போது ரோட்டா வைரஸ் தடுப்பூசி போட வேண்டும்?

ஏசிவிஐபி-யின் (ஐஏபி) படி, ரோட்டாவைரல் வயிற்றுப்போக்குக்கான தடுப்பூசியை பிறந்து ஆறு வாரங்களில் இருந்து போடத் தொடங்க வேண்டும்.

தடுப்பூசி பற்றிய மேலும் தகவலுக்கு, உங்கள் குழந்தை மருத்துவரைக் கலந்து ஆலோசிக்கவும்.

இருப்பினும், மேலும் தகவலுக்கு உங்கள் மருத்துவரைக் கலந்து ஆலோசிக்கவும்.

ரோட்டா வைரஸ் தடுப்பூசியுடன் தொடர்புடைய பொதுவான பக்க விளைவுகள் என்ன?

பக்க விளைவுகள் அரிதாகவே காணப்படும். பொதுவாக லேசானவை மற்றும் அசௌகரியம், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை இதில் அடங்கும்.

ரோட்டாவைரஸ் தடுப்பூசியின் முதல் அல்லது இரண்டாவது டோஸுக்குப் பின்னர் ஒரு வாரத்திற்குள் இன்டஸ்ஸஸ்செப்ஷன் (ஒரு வகை குடல் அடைப்பு) சில நேர்வுகளில் நிகழலாம்.

பக்க விளைவுகள் பற்றிய மேலும் விவரங்களுக்கு, உங்கள் மருத்துவரைக் கலந்து ஆலோசிக்கவும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

ரோட்டா வைரஸால் யாருக்கு ஆபத்து?

ரோட்டா வைரஸ் நோய் குழந்தைகள் மற்றும் இளம் குழந்தைகளில் மிகவும் பரவலாகக் காணப்படுகிறது. ரோட்டாவைரஸ்கள் 3-5 வயதிற்குள் ஏறத்தாழ ஒவ்வொரு குழந்தையையும் பாதிக்கின்றன. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் கடுமையான, நீர்ச்சத்திழப்பு வயிற்றுப்போக்கிற்கு உலகளவில் இது முக்கிய காரணமாகும்.

ரோட்டா வைரஸ் வயிற்றுப்போக்கு மற்ற வகை வயிற்றுப்போக்கிலிருந்து வேறுபட்டதா?

ஆம், ரோட்டா வைரஸ் வயிற்றுப்போக்கு மற்ற வகை வயிற்றுப்போக்கிலிருந்து வேறுபட்டது. காய்ச்சல், வாந்தி மற்றும் கடுமையான வயிற்றுப்போக்கால் குழந்தை பாதிக்கப்படலாம். வயிற்றுப்போக்கு ஒரு நாளைக்கு 15 முறைக்கு மேல் ஏற்படலாம் மற்றும் 9 நாட்கள் வரை தொடரலாம். இது கடுமையான நீர்ச்சத்திழப்புக்கு வழிவகுக்கிறது. இதனால் அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலை உருவாகிறது.

இந்தியாவில் ரோட்டா வைரஸ் வயிற்றுப்போக்கு எவ்வளவு பரவலானது?

மதிப்பீட்டின்படி, ரோட்டா வைரஸ் வயிற்றுப்போக்கினால் இந்தியாவில் ஆண்டுதோறும் 8.7 லட்சம் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். அதாவது ஒவ்வொரு 31 குழந்தைகளில் 1 குழந்தை ரோட்டா வைரஸ் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அபாயம் உள்ளது. பிறந்த பின் முதல் ஆண்டு இந்தியாவில் குழந்தைகளுக்கு அதிக ஆபத்து நிறைந்த காலமாகும்.

என் குழந்தையின் ஆரோக்கியத்தில் நான் அதிக கவனம் செலுத்துகிறேன். ரோட்டா வைரஸ் வயிற்றுப்போக்கு பற்றி நான் இன்னும் கவலைப்பட வேண்டுமா?

ஆம். ரோட்டா வைரஸ் வயிற்றுப்போக்கை மேம்படுத்தப்பட்ட சுத்தம் மற்றும் சுகாதாரத்தினால் கூட தவிர்க்க முடியாது. ஏனெனில் ரோட்டாவைரஸ் ஒரு கடினமான வைரஸ். இது பல நாட்கள் பொருட்களில் தங்கி வாழக்கூடியது. வெறுமனே கைகளைக் கழுவி, கிருமிநாசினியால் சுத்தம் செய்வதால் மட்டுமே ரோட்டா வைரஸைத் தடுப்பது மிகவும் கடினம்.

ரோட்டாவைரஸ் வயிற்றுப்போக்கினால் ஏற்படும் நீர்ச்சத்திழப்பை வீட்டிலேயே வைத்து என்னால் ஓஆர்எஸ்-ஆல் சமாளிக்க முடியாதா?

ரோட்டாவைரஸ் வயிற்றுப்போக்கால பாதிக்கப்பட்ட குழந்தைகள் பொதுவாக வாந்தியெடுக்கும். இது வாய்வழியாக நீர்ச்சத்தைக் கொடுப்பதைக் கடினமாக்குகிறது. இதைத் தொடர்ந்து தண்ணீர் போல வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. இதனால், குழந்தைகள் இழக்கும் உடல் திரவங்களை அவசரமாகப் பதிலீடு செய்ய வேண்டும். எனவே அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும்.

ரோட்டா வைரஸ் வயிற்றுப்போக்கு மேலாண்மை பற்றிய மேலும் தகவலுக்கு உங்கள் மருத்துவரைக் கலந்து ஆலோசிக்கவும்.

ரோட்டா வைரஸ் வயிற்றுப்போக்கிலிருந்து என் குழந்தையை எவ்வாறு பாதுகாப்பது?

கை கழுவுதல் மற்றும் சுத்தம் போன்ற நல்ல சுகாதார நிலை முக்கியம். ஆனால் நோய் பரவுவதை கட்டுப்படுத்த இது போதுமானதாக இல்லை. ரோட்டா வைரஸ் தடுப்பூசி உங்கள் குழந்தையை ரோட்டா வைரஸ் நோயிலிருந்து பாதுகாக்கும் வழிகளில் ஒன்றாகும். ரோட்டா வைரஸ் தடுப்பூசி பற்றிய மேலும் தகவலுக்கு உங்கள் மருத்துவரைக் கலந்து ஆலோசிக்கவும்.

ரோட்டா வைரஸ் தடுப்பூசி போட்ட பிறகு என் குழந்தைக்கு வயிற்றுப்போக்கு ஏற்படாதா?

வயிற்றுப்போக்கு பல்வேறு வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களால் ஏற்படலாம். இருப்பினும், ரோட்டா வைரஸ் கடுமையான நீர்ச்சத்திழப்பு வயிற்றுப்போக்குக்கான பொதுவான காரணங்களில் ஒன்றாகும். இதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியிருக்கலாம். ரோட்டாவைரஸுக்கு எதிரான தடுப்பூசி உங்கள் குழந்தையை இந்தத் தீவிரமான வகை நீர்ச்சத்திழப்பு வயிற்றுப்போக்கு மற்றும் ரோட்டா வைரஸால் மட்டுமே ஏற்படும் அதனுடன் தொடர்புடைய நோய்களினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதில் இருந்து பாதுகாக்கிறது.

கிளேக்ஸோஸ்மித்கிளைன் பார்மசூட்டிக்கல்ஸின் ஒரு பொது விழிப்புணர்வு முன்முயற்சி. டாக்டர். அன்னி பெசன்ட் சாலை, வோர்லி, மும்பை 400 030, இந்தியா.

இந்த உள்ளடக்கத்தில் காணப்படும் தகவல் பொது விழிப்புணர்வுக்கானது மட்டுமே. இந்த உள்ளடக்கத்தில் உள்ள எதுவும் மருத்துவ ஆலோசனையைக் கொண்டிருக்கவில்லை. உங்கள் கோளாறுகள் பற்றிய எந்த ஒரு மருத்துவ ரீதியான சந்தேகம், கேள்விகள் மற்றும் கவலைகள் குறித்து உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசியுங்கள். இங்கே சுட்டிக் காட்டப்படும் தடுப்பூசி அட்டவணை முழுமை பெற்றது அல்ல. உங்கள் குழந்தை நல மருத்துவரிடம் முழுத் தடுப்பூசி அட்டவணை பற்றிய அறிவுரையைப் பெறவும். இந்த உள்ளடக்கத்தில் காட்டப்படும் மருத்துவர் விளக்கும் நோக்கத்துக்காகவே பயன்படுத்தப்படுகிறார். இவர் ஒரு தொழில்ரீதியான மாடல் மட்டுமே. நோய் விளக்கும் சின்னங்கள்/படங்கள் யாவும் விளக்கும் நோக்கத்திற்காக மட்டுமானவையே.

உங்கள் குழந்தையின் பாதுகாப்பில் இருக்கக் கூடிய இடைவெளிகளைக் கண்டறியவும்

உங்கள் குழந்தைக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறதா அல்லது இல்லையா என்பதைச் சரிபார்க்க தனிப்பயனாக்கப்பட்ட காலநிரலை உருவாக்கவும்*

இப்போதே பயன்படுத்தத் தொடங்குங்கள்

2021 (c) கிளேக்ஸோஸ்மித்கிளைன் பார்மசூட்டிக்கல் லிமிட்டெட். அனைத்து உரிமைகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன
தனியுரிமைக் கொள்கை | குக்கீகள் கொள்கை | பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு
இந்த இணையதளம் இந்தியாவில் வசிப்பவர்களுக்கு மட்டுமே.
ஐஏபி –யின் (இந்தியன் அகாதெமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ்) வழக்கமான மற்றும் கேட்ச்-அப் பரிந்துரைகளில் காணப்படும் தடுக்கக்கூடிய நோய்களின் பட்டியலில் உள்ளவையே இங்கு குறிப்பிடப்படும் நோய்களின் பட்டியல் ஆகும். குழந்தைகளைப் பாதிக்கும் நோய்கள் இந்தப் பட்டியலில் காணப்படுபவைகளுக்கு மேலேயேஇருக்கலாம். மேலதிகத் தகவலுக்கு உங்கள் குழந்தைநல மருத்துவரைக் கலந்தாலோசிக்கவும்.
கிளேக்ஸோஸ்மித்கிளைன் பார்மசூட்டிக்கல்ஸின் ஒரு பொது விழிப்புணர்வு முன்முயற்சி. டாக்டர். அன்னி பெசன்ட் சாலை, வோர்லி, மும்பை 400 030, இந்தியா. இந்த உள்ளடக்கத்தில் காணப்படும் தகவல் பொது விழிப்புணர்வுக்கானது மட்டுமே. இந்த உள்ளடக்கத்தில் உள்ள எதுவும் மருத்துவ ஆலோசனையைக் கொண்டிருக்கவில்லை. உங்கள் கோளாறுகள் பற்றிய எந்த ஒரு மருத்துவ ரீதியான சந்தேகம், கேள்விகள் மற்றும் கவலைகள் குறித்து உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசியுங்கள். இங்கே சுட்டிக் காட்டப்படும் தடுப்பூசி அட்டவணை முழுமை பெற்றது அல்ல. உங்கள் குழந்தை நல மருத்துவரிடம் முழுத் தடுப்பூசி அட்டவணை பற்றிய அறிவுரையைப் பெறவும். இந்த உள்ளடக்கத்தில் காட்டப்படும் மருத்துவர் விளக்கும் நோக்கத்துக்காகவே பயன்படுத்தப்படுகிறார். இவர் ஒரு தொழில்ரீதியான மாடல் மட்டுமே. நோய் விளக்கும் சின்னங்கள்/படங்கள் யாவும் விளக்கும் நோக்கத்திற்காக மட்டுமானவையே.
CL code: NP-IN-ABX-WCNT-210003, DoP Dec 2021

பகிரவும்
Vaccination Tracker