மெனிங்கோகோகல் மூளைக்காய்ச்சல் முக்கியமாக மூளை மற்றும் தண்டு வடத்தின் புறணியைப் பாதித்து வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இருப்பினும், நோய்த்தொற்றின் தீவிரத்தை பொறுத்து அறிகுறிகள் மாறுபடலாம். பொதுவான அறிகுறிகளில் சில:
- காய்ச்சல்
- தலைவலி
- குமட்டல்
- வாந்தி
- கழுத்து விறைப்பு
- குழப்பமான மன நிலை
- போட்டோபோபியா (ஒளிக்கூச்சம்)
மெனிங்கோகோகல் செப்டிசீமியா என்பது நோய்த்தொற்றின் மிகவும் கடுமையான வடிவங்களில் ஒன்று ஆகும். இது ஓர் அடர் ஊதா நிறச் சொறி மற்றும் விரைவான சர்குலேட்டரி கொலாப்ஸ் ஆக வெளிப்படலாம், இது பெரும்பாலும் மரணத்தில் முடியும்.
சிக்கல்கள்
ஆரம்ப கட்டத்திலேயே நோய் கண்டறியப்பட்டாலும், நோய்த்தொற்று ஏற்பட்டு முதல் 24 முதல் 48 மணிநேரங்கள் கூட சுமார் 8% முதல் 15% நோயாளிகள் உயிர்வாழ முடியாது.
உயிர் பிழைப்பவர்களில் ஐந்தில் ஒருவருக்கு காது கேளாமை, நரம்பு மண்டலப் பிரச்சனைகள், மூளை பாதிப்பு போன்ற சிக்கல்கள் ஏற்படலாம்.