காலாராவால் பாதிக்கப்பட்டுள்ள ஓரிடத்தில் வாழ்ந்தாலோ அல்லது அப்படிப்பட்ட இடத்தில் பயணம் செய்தாலோ பின்வரும் முறைகளைப் பின்பற்றவும்:
- உணவைக் கையாளும் முன்னும் கழிப்பறையைப் பயன்படுத்திய பின்னும் கைகளை சோப்பால் கழுவவும்.
- கொதிக்கவைத்த, சுத்திகரிக்கப்பட்ட அல்லது பாட்டில் தண்ணீரையே பயன்படுத்தவும்.
- முடிந்த வரையில் தெருவில் விற்கும் உணவுகளைத் தவிர்க்கவும்.
- திராட்சை மற்றும் பெர்ரிகள் போன்ற தோலை உரிக்க முடியாத பழங்களைத் தவிர்க்கவும்.
- சுஷி மற்றும் ஷெல்பிஷ் போன்ற சமைக்காத அல்லது சரியாகச் சமைக்காத கடல் உணவுகளைத் தவிர்க்கவும்.