You are now leaving GSK’s website and are going to a website that is not operated/controlled by GSK. Though we feel it could be useful to you,we are not responsible for the content/service or availability of linked sites. You are therefore mindful of these risks and have decided to go ahead.

Agree Stay
Follow Us
Vaccination Center Near You

Shingles

பின்வருபவர்களுக்குத் தகவலைத் தேடுதல்:

 

உங்களுக்கு அக்கி ஏற்படும் ஆபத்து இருக்கிறதா?

நீங்கள் 50 வயதுக்கும் மேற்பட்டவரா?

உங்களுக்கு நோய்த்தடுப்பு சக்தி குறைவாக இருக்கிறதா (பலவீனமான நோய்த்தடுப்பு மண்டலம்) ?

உங்களுக்கு சின்னம்மை நோய் (சிக்கன்பாக்ஸ்) வந்திருக்கிறதா?

உங்களுக்கு நீரிழிவு, ஆஸ்துமா அல்லது சிஓபிடி உள்ளதா?

அக்கியையும் அதைத் தடுப்பதையும் பற்றி மேலும் அறிய உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசியுங்கள்

அக்கியையும் அதைத் தடுப்பதையும் பற்றி மேலும் அறிய உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசியுங்கள்

ஷிங்கிள்ஸ் என்றால் என்ன?

அக்கி ஹெர்ப்பஸ் ஜோஸ்டர் என்றும் அழைக்கப்படுகிறது. வேரிசெல்லா ஜோஸ்டர் வைரஸ் மறுபடியும் செயலூக்கம் பெறுவதால் இது ஏற்படுகிறது. சின்னம்மை ஏற்பட்ட பின் அல்லது வேரிசெல்லா ஜோஸ்டர் வைரஸ் தாக்குதலுக்குப் பின் அந்த வைரஸ் உடலுக்குள் வாழ்நாள் முழுவதும் செயலற்ற நிலையில் இருக்கும். வயதாகும்போது இயல்பாகவே நோய்த்தடுப்பு மண்டலம் பலவீனம் ஆகும். இதனால் செயலற்ற நிலையில் இருக்கும் வைரஸ் செயலூக்கம் பெற்று அக்கியை ஏற்படுத்தும்.

அதனால், வயதானவர்களுக்கு அக்கி வரும் ஆபத்து அதிகம். உடலின் ஒரு பகுதியில் அல்லது முகத்தில் இது வலிமிகுந்த கொப்புளச் சொறியை உருவாக்கும்

அக்கி பற்றி நீங்கள் அறிய வேண்டியது என்ன

அக்கியை உருவாக்குவது எது?

சின்னம்மை நோயை வேரிசெல்லா ஜோஸ்டர் வைரஸ் உருவக்குகிறது (ஹெர்பஸ் ஜோஸ்டர் என்றும் அழைக்கப்படும்). ஒருவருக்கு சின்னம்மை ஏற்பட்ட பின் அந்த வைரஸ் உடலுக்குள் செயலற்ற நிலையில் தங்கிவிடும். பின்னர் பல ஆண்டுகளுக்குப் பின் அது செயலூக்கம் பெற்று அக்கியை ஏற்படுத்துகிறது. இந்த வைரஸ் எப்படி மீண்டும் செயலூக்கம் பெறுகிறது என்பது அறிவியல் அறிஞர்களுக்கும் சரியாகத் தெரியவில்லை. இருப்பினும் இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். வயதாகும் போது நோய்த்தடுப்பு மண்டலம் பலவீனமாகிறது. நோய்த்தடுப்பு மண்டலம் பலவீனமாகும் போது வைரஸ் செயலூக்கம் பெறுவதைத் தடுக்க முடியாது. அதனால் வயதானவர்களுக்கு அக்கி ஏற்படும் அபாயம் அதிகம்.

மற்றும் அதற்கு மேல் வயதுள்ளவர்களுக்கு அபாயம் ஏன் அதிகரிக்கிறது?

முதலாவதாக, ஏற்கெனவே சின்னம்மை ஏற்பட்டவர்களுக்கு அக்கியை உருவாக்கும் வைரஸ் உடலுக்குள் உள்ளது. சிலருக்கு சின்னம்மை வந்திருக்கலாம் ஆனால் அவர்களுக்கு அது நினைவில் இருக்காது. அவர்கள் எவ்வளவு ஆரோக்கியமாக உணர்ந்தாலும் வைரஸ் மறுபடியும் செயலூக்கம் பெற்றால் அவர்களுக்கு அக்கி ஏற்படலாம்.

பலவீனமான நோய்த்தடுப்பு மண்டலம் கொண்டவர்களுக்கும் அக்கி வரும் ஆபத்து அதிகம். வயதாகும் போது இயற்கையாகவே நோய்த்தடுப்பு மண்டலம் பலவீனம் அடைவதால் 50 வயதுக்கு மேல் உள்ளவர்கள் அதிக ஆபத்தில் இருக்கிறார்கள்.

வயது முதிர்ந்தவர்களுக்கு போஸ்ட்-ஹெர்பெடிக் நியூரால்ஜியா (பிஎச்என்) போன்ற சிக்கல்கள் ஏற்படும் ஆபத்து அதிகம்.

அக்கி தொற்று நோயா?

அக்கியை உருவாக்கும் வைரஸ் உங்கள் உடலுக்குள் ஏற்கெனவே இருந்து அதுதான் உங்களுக்கு சின்னம்மை நோயை ஏற்படுத்துகிறது. அது மீண்டும் செயலூக்கம் பெறும் வரை செயலற்ற நிலையில் இருக்கும். ஆகவே அதை இன்னொருவருக்கு உங்களால் கடத்த முடியாது.

இருந்தாலும், இன்னொருவருக்கு சின்னம்மை வராமல் இருந்தாலோ அல்லது அதற்கு எதிராக அவருக்குப் பாதுகாப்பு இல்லை என்றாலோ அவருக்குத் தொற்று ஏற்படலாம். ஒருவருடைய கொப்புளத்தில் நேரடி தொடர்பு ஏற்படும் ஒருவருக்கு சின்னம்மை ஏற்படலாம்.

அக்கி கொப்புளச்சொறி எத்தனை காலம் நீடிக்கும்?

பொதுவாக அக்கியினால் வலிக்கும் சொறியும் தொடர்ந்து கொப்புளமும் ஏற்பட்டு 1—15 நாள் நீடித்து 2-4 வாரங்களில் அகலும். அது உடல் அல்லது முகத்தின் ஒரு பக்கத்தில் பொதுவாக ஏற்படும். சொறி தோன்றுவதற்கு 48-72 மணி நேரத்துக்கு முன் சொறி ஏற்படப் போகும் இடத்தில் வலி, அரிப்பு, கூச்சம் அல்லது உணர்ச்சி இன்மை ஏற்படும்.

அக்கி வரும் ஆபத்தை மன அழுத்தம் கூட்டுமா?

அக்கி வரும் ஆபத்தை மன அழுத்தம் கூட்டுவதற்கான சாத்தியக் கூறு உள்ளது. அக்கி ஏற்பட வயது ஒரு முக்கியக் காரணி. பெரும்பாலும் அக்கி 50 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுள்ளவர்களுக்கே வருகிறது.

மேலும் அறிய உங்கள் மருத்துவருடன் பேசுங்கள்.

சின்னம்மைக்கும் அக்கிக்கும் இடையில் இருக்கும் தொடர்பு என்ன?

சிக்கன் பாக்ஸ் என்பது மிகவும் தொற்றக்கூடிய நோயாகும், இது பொதுவாக உடல் முழுவதும் கொப்புளம் போன்ற சொறி, அரிப்பு மற்றும் காய்ச்சலை ஏற்படுத்துகிறது. சிக்கன் பாக்ஸ் வைரஸ் மீண்டும் செயல்படலாம், இதனால் ஷிங்கிள்ஸ் ஏற்படுகிறது. சிங்கிள்ஸ் உள்ளவர்களுக்கு உடலின் ஒரு பகுதியில் வலி, அரிப்பு, கூச்ச உணர்வு மற்றும் கொப்புளங்கள் போன்றவை வாரக்கணக்கில் நீடிக்கும்.

எனக்கு சிக்கன் பாக்ஸ் வரவில்லை என்றால் எனக்கு இன்னும் ஆபத்து இருக்கிறதா?

அவர்கள் ஒருபோதும் சிக்கன் பாக்ஸ் இல்லாதிருந்தால் அவர்களால் சிங்கிள்ஸை உருவாக்க முடியாது. அவர்கள் அறியாமலேயே வைரஸுக்கு ஆளாகியிருக்கலாம் அல்லது அவர்கள் நினைவில் இல்லாமல் இருக்கலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், வயதானவர்களுக்கு ஷிங்கிள்ஸ் உருவாகும் அபாயம் உள்ளது.

எனக்கு இதுவரை சின்னம்மை வரவில்லை என்றால் அதிக ஆபத்து இருக்கிறதா?

ஹெர்பஸ் ஜோஸ்டர் ஆப்தால்மிக்கஸ் என்பது ஓரு விதமான அக்கி. இது கண்ணையும் கண் பகுதியையும் தாக்குகிறது. நெற்றியில் சொறி மற்றும் எல்லா திசுக்களிலும் வலி தரும் அழற்சி இதன் அறிகுறிகளில் அடங்கும்.

அக்கியின் சாத்தியமான சிக்கல்கள்

பெரும்பாலானோர் அக்கி தொற்றில் இருந்து முழுமையாக குணம் அடைந்தாலும் சிலருக்கு உடல்நலச் சிக்கல்கள் ஏற்படலாம்.

  • போஸ்ட் ஹெர்பெடிக் நியூரால்ஜியா (பிஎச்என்)
  • கண் நோய்
  • நரம்பியல் பிரச்சினைகள்
  • கேள் திறன் பிரச்சினைகளும் சமநிலை பாதிப்பும்

போஸ்ட் ஹெர்பெடிக் நியூரால்ஜியா (பிஎச்என்)

அக்கியால் பாதிக்கப்படுவோரில் 25% பேருக்கு ஏற்படும் ஓர் உடல்நலச் சிக்கலே பிஎச்என். அக்கி சொறி குணமான பின் பல மாதங்கள் அல்லது ஆண்டுகளுக்குத் தொடர்ந்து நரம்பு வலி இருப்பது இதன் ஒரு முக்கிய அறிகுறி ஆகும். பாதிக்கப்பட்ட இடத்தில் பொதுவாக இந்த வலி இருக்கும்.

கண் நோய்

கண் அல்லது மூக்கைப் பாதிக்கும் அக்கிச் சொறியான ஹெர்பஸ் ஜோஸ்டர் ஆப்தால்மிகஸ் (எச்இஸெட்ஓ) கொண்டவர்களில் 50% பேருக்கு கண் சிக்கல்கள் ஏற்படுகின்றன. எச்இஸெட்ஓ உள்ளவர்களில் 30% பேருக்கு இரட்டைப் பார்வை உருவாகலாம். கண் நரம்பு சிதைவு அரிதானது, எச்இஸெட்ஓ உள்ளவர்களில் 0.5% பேருக்கு ஏற்படலாம்.

நரம்பியல் பிரச்சினைகள்

மூளையழற்சி (மூளை வீங்குதல்) போன்ற நரம்பியல் சிக்கல்கள் அரிதே. அக்கி ஏற்பட்டவர்களில் 1% பேருக்கு ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

கேள் திறன் பிரச்சினைகளும் சமநிலை பாதிப்பும்

அரிதான நேர்வுகளில், கேள்திறன் மண்டலத்தில் அக்கி வைரஸ் செயலூக்கம் பெறலாம். இதனால் ஹெர்பஸ் ஜோஸ்டர் ஆடிகஸ் ஏற்படும். கேள்திறன் பாதிப்பு, தலைசுற்றல் (வெர்ட்டிகோ), காதிரைச்சல் (டினிட்டஸ்), கடுமையான முகவலி, முகவாதம் (ராம்சே ஹண்ட் சிண்ட்ரோம்) போன்றவை இதன் அறிகுறிகள். அக்கி ஏற்பட்டவர்களில் 1% பேருக்கு சமநிலைப் பிரச்சினைகள் உருவாவதுண்டு.

அக்கி ஏற்பட்ட பின் உருவாக்கும் சிக்கல்களின் முழுமையான பட்டியல் அல்ல இது. மேலும் தகவலுக்கு மருத்துவரிடம் பேசவும்.

சிங்கிள்ஸின் அறிகுறிகள் என்ன

பொதுவாக அக்கியினால் வலிக்கும் கொப்புளச் சொறி உருவாகும். உடலின் வலது அல்லது இடது பக்கத்தில் ஒரு நரம்புப் பாதையை ஒட்டி வரிசையான கொப்புளங்கள் ஏற்படும். உடல், கைகள், தொடை அல்லது தலையில் (கண்கள் அல்லது காதுகள் உட்பட) இவை உருவாகலாம். பொதுவாக பாதிக்கப்பட்டோர் வேதனை#, எரிச்சல்#குத்துதல்# அல்லது அதிர்ச்சி என விவரிப்பார்கள். உடை அணிதல், நடை, தூக்கம் போன்ற அன்றாடக நடவடிக்கைகளை இது பாதிக்கும்.

தொற்று எவ்வாறு உணரப்படுகிறது

ஓர் அக்கி தொற்று பொதுவாக உடலின் ஒரு சிறு பகுதியைப் பாதிக்கும் தோல் சொறியோடு தொடங்குகிறது. மின்சார அதிர்ச்சி# உடலைத் தாக்குவது போல, அல்லது ஆணி குத்துவது# போல அல்லது வெந்நீரால் ஏற்படும் கொப்புளம் போன்ற# வலியைப் பாதிக்கப்பட்ட நபர் உணர்வார். சொறி தோன்றுவதற்கு 48-72 மணி நேரத்துக்கு முன் பாதிக்கப்பட்ட பகுதியில் அரிப்பு, கூச்சம் மற்றும் உணர்வற்ற நிலை ஏற்படும்.

காய்ச்சல், தலைவலி, குளிர்காய்ச்சல் அல்லது வயிற்றுப் பிரச்சினைகளும் மக்களுக்கு ஏற்படலாம்.

ஆகவே, இந்த அறிகுறிகளில் ஏதாவது காணப்பட்டால், உடனடியாக மருத்துவரிடம் பேசவும்.

ஆணிபோல் குத்துதல்#

மின் அதிர்ச்சி#

கொதிக்கும் நீரால் ஏற்படும் கொப்புளம் #

சிங்கிள்ஸ்: தடுப்பு மற்றும் சிகிச்சை விருப்பங்கள்

உங்களுக்கு அக்கி ஏற்பட்டால் அக்கியையும் அதை தடுப்பதையும் பற்றி மேலும் அறிய உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள்.

அக்கி தடுப்பு முறை
சின்னம்மைக்குப் பின் உடலில் மீந்திருக்கும் வைரஸ் மறுபடியும் செயலூக்கம் பெறுவதால் அக்கி உண்டாகிறது. ஆகவே ஒருவருக்கு சின்னம்மை ஏற்படாவிட்டால் அவரை சின்னம்மை மற்றும் அக்கியால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து விலகி இருக்குமாறு கூறுங்கள். சின்னம்மை ஏற்படுவதைத் தடுக்க அனைத்து கைசுத்தம், இருமல் சுகாதார முறைகளையும் கடைப்பிடிப்பதை உறுதிசெய்யவும்.

அக்கியைத் தடுக்க உதவும் சிறந்த முறைகள் எவை.

தடுப்பூசியால் அக்கியைத் தடுக்கலாம். அக்கி மற்றும் அதன் தடுப்பு பற்றி மேலும் அறிய உங்கள் மருத்துவருடன் பேசுங்கள்.

அக்கியைத் தடுக்க தடுப்பூசி எவ்வாறு உதவுகிறது?

தடுப்பூசி உங்கள் நோய்த்தடுப்பு மண்டலத்தை ஊக்கி அக்கி வைரசை எதிர்த்துப் போராடி அதை மீண்டும் செயலூக்கம் பெறாதவாறு தடுக்கிறது.

அக்கிக்கு எவ்வாறு சிகிச்சை அளிப்பது அல்லது நிர்வகிப்பது?

சிகிச்சை, நோய்க்கடுமையையும் நோயின் கால அளவையும் குறைக்கிறது. மேலும் உங்கள் அறிகுறிகளைப் பொறுத்து வைரஸைப் பலவீனப்படுத்தலாம்/அல்லது வலி நிவாரணம் அளிக்கலாம்

உங்களுக்கு அக்கி இருபப்தாக நீங்கள் நினைத்தால் உங்கள் மருத்துவரிடம் உடனே பேசுங்கள். அறிகுறிகளின் கடுமையையும் கால அளவையும் குறைக்க அவர்கள் தகுந்த மருந்துகளைப் பரிந்துரைக்கலாம்.

 

அறிகுறிகளை நிர்வகிக்க பொதுவான ஆலோசனைகள்:

  • தொற்று அபாயத்தைக் குறைக்க சொறியை சுத்தமாகவும் உலர்ந்ததாகவும் வைக்கவும்
  • தளர்வான உடைகளை அணியவும்
  • ஒரு நாளுக்கு சில முறை குளிர் ஒத்தடம் கொடுக்கவும்

அக்கி மற்றும் அதன் தடுப்பு பற்றி மேலும் அறிய ஒரு மருத்துவரிடம் பேசவும்